தமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணை
தமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை
தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சி
தேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி
வளங்களை வாரிதரும் வள்ளலாய் வனங்கள்
வந்தோரை வாழவைக்கும் வஞ்சகமில்லா குணங்கள்
மண்ணிலே விதைவிதைத்து பொன்னாக்கும் மருதம்
மக்களுக்கு உணவளிக்கும் உழைப்பின் உருவம்
நெஞ்சிலே சுமந்திடும் நெடுங்கடல் நெய்தல்
நம்பியவர்களுக்கு தன்னையேதந்து தானங்களை செய்தல்
மணல்கள் எங்கும் பரவிடும் பாலைவனங்கள்
மனிதர்களின் மனங்களை தூண்டிவிடும் கனிமவளங்கள்
தலைவன் தலைவியை தழுவிடும் தாகங்கள்
தனிமையில் தவித்திடும் தளராத சோகங்கள்
புணர்வதும் இருப்பதும் ஊடலும் உறவுகள்
பிரிவதும் இரங்கலும் ஐந்திணை அனுபவங்கள்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்