புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஜனவரி மாதம் ஜெகதாப்பட்டினம் காவல் சரகத்தில் 140 கிலோ கஞ்சா மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் 41 கிலோ கஞ்சா மொத்தம் 181 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.