நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பின் கீழ் நாகை மாவட்ட காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரைக் கொண்டு பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பில் குறும்படத்தை தயாரித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், “தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குறும்படத்தை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளும் காண்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்கள் மேலும் இந்த குறும்படத்தை சிறப்புடன் இயக்கிய K.நெல்சன் முதல் நிலை காவலர் கீழ்வேளூர் காவல் நிலையம் என்பவரை வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் இந்த குறும்படத்தில் தங்களது பங்களிப்பை வழங்கிய அனைத்து நபர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.