திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பாரத பிரதமர், தமிழக முதலமைச்சர் திருகரங்களால் 2/1/2024 அன்று திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற மு.ஹர்சினி தேவி மருத்துவ நிர்வாக பிரிவில் SRC கல்லூரியில் முதல் தரம் பெற்றதற்கான மாணவிக்கு, கோகோ விளையாட்டில் லால்குடி வட்டார அளவில் முதலிடம் பெற்ற ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழாவில் கல்லூரி/பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பாலசுப்பிரமணியன் கல்லக்குடி உதவி காவல் ஆய்வாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காவல் துறை பன்னீர்செல்வம், அன்பு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய புள்ளம்பாடி கிராமிய கலைஞர்கள் கி.சூர்யா, ச.மணிகண்டன் குழுவினரின் தமிழர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக செய்தார்கள்.
ச.சத்யராஜ் இயற்கை விவசாய ஆர்வலர் அவர்கள் சிறப்புரை நீர் நிலைகளில் விழிப்புணர்வாக மக்களிடம் சென்றடைந்தது. யோகரத்னா ப.கிருஷ்ணகுமார் குருஜி ருத்ர சாந்தி யோகாலயா அவர்கள் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கருப்பையா முருகன் திரைப்பட இயக்குனர் யானைமேல் குதிரை சவாரி, விடியாத இரவு ஒன்று வேண்டும் திரைப்படத்தை இயக்கியவர் கலந்துகொண்டு இந்த ஊராட்சிக்கும் தனக்குமான உறவு மற்றும் தன்னம்பிக்கை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இசைக்கருவிகள் இல்லாத இசை நிகழ்ச்சி R.V.சரவணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் திருநாள் விழா, கல்லூரி/ பள்ளி மாணவ மாணவிகளின் பாராட்டு விழாவை கண்டு ஊராட்சி பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
விழாவை தேன்மொழி ராஜேந்திரன் ஆசிரியர் தொகுத்து வழங்கினார். விழாவில் ச. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.