ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை வாடகைக்கு எடுக்கும் நபரே ஓட்டிச் செல்லலாம். இந்த செயலியை பயன்படுத்தி ஒருவர் சென்னையில் Ertiga காரை பதிவு செய்து வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்.
வாடகைக்கு பதிவு செய்த நாட்கள் முடிந்த பிறகும் தன்னுடைய கார் திரும்ப வராததால் காரின் உரிமையாளர், தொலைபேசி வாயிலாக காரை வாடகைக்கு எடுத்துச் சென்றவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அவருடைய தொலைபேசி எண் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. GPS கருவின் உதவியால் தன்னுடைய கார் எங்கு நிற்கிறது என்பதை இவர் தெரிந்து கொள்கிறார். அன்றைய தினம் கும்பகோணத்தில் ஒரு கடையின் வாயிலில் தன்னுடைய Ertiga கார் நிற்பதை தெரிந்து கொள்கிறார்.
கூகுள் மேப்பில் street view என்ற அம்சத்தை பயன்படுத்தி, தன்னுடைய கார் நிற்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கடையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தன்னுடைய காரின் ஓட்டுனரிடம் செல்போனை கொடுத்து பேச சொல்லும்படி கேட்டுக்கொள்கிறார். அப்படிப், பேசும்பொழுது மறுமுனையில் இருக்கும் நபர், இந்த காரை தான் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அடமானத்திற்கு பெற்று இருப்பதாக சொல்கிறார். இவர் அந்த நபரிடம் காரின் உரிமையாளர் விவரத்தை எடுத்துச் சொல்லும் பொழுது அவரும் புரிந்து கொண்டு தன்னிடம் அடமானம் வைத்து சென்ற நபரை தொலைபேசியில் அழைத்து பணத்தை திரும்ப செலுத்தி விட்டு காரை எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார். அதன்படி, அடமானம் வைத்த நபர் நேரில் திரும்ப வந்து பணத்தை செலுத்தி விட்டு காரை எடுத்துச் செல்ல முயல்கிறார். அந்த சமயம் காரின் உரிமையாளர் சென்னையில் இருந்தபடி GPS கருவியின் உதவியாள் காரின் இஞ்சினை அணைத்து விடுகிறார். இவர் உடனே அடமானம் பிடித்தவரிடம் உங்களிடம் யார் இதை எல்லாம் கூறியவர் என்று கேட்கையில் காரின் உரிமையாளரின் தொலைபேசி எண்ணை அடமானம் வைத்த நபரிடம் கொடுக்கிறார்.
அடமானம் வைத்த நபர் காரின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் பெயர் மோகன் பாபு எனக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் என்றும் இந்த காரை தான் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கு அடமானத்திற்கு பெற்றிருப்பதாகவும், அந்த பணத்தை தாங்கள் கொடுத்தால் தங்களிடம் உங்கள் காரை கொடுத்து விடுகிறேன் என காரின் உரிமையாளரிடம் மோகன் பாபு தெரிவிக்கிறார், இத்துடன் GPS கருவிகளை அவிழ்த்து விட்டு காரை எடுத்துச் செல்கிறார் மோகன் பாபு.
இதன் பின் கார் எங்கு இருக்கிறது என்பதை காரின் உரிமையாளரால் கண்காணிக்க முடியவில்லை. எனவே, காரின் உரிமையாளரும் மோகன் பாபுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் தன் குடும்ப சூழலை எடுத்துச் சொல்கிறார். அதற்கு மோகன் பாபு உங்க சூழல் எனக்கு புரிகிறது வேண்டுமென்றால் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன், இந்த காரை 5 லட்சம் ரூபாய்க்கு என்னிடம் கொடுத்து விடுங்கள் என சொல்கிறார். இதற்கு ஒப்புக்கொண்ட காரின் உரிமையாளர் தன்னுடைய வங்கி கணக்கு எண்ணை மோகன் பாபுவிற்கு அனுப்பி வைக்கிறார். அந்த வங்கி கணக்கில் மோகன் பாபு ரூபாய் 1100 மட்டும் அனுப்பிவிட்டு பல சால்சால்புகளை சொல்லி பணம் தராமல் காலம் கடத்துகிறார். காரின் உரிமையாளர் தொடர்ந்து மோகன் பாபுவுடன் காரை கொடுங்கள் அல்லது நீங்கள் பேசியபடி பணத்தை கொடுங்கள் என வலியுறுத்துகிறார். அதற்கு மோகன் பாபு காரின் RC புக்கை நேரில் வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லும்படி சொல்கிறார்.
இதற்கிடையில் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களிடம் காரின் உரிமையாளர் விவரத்தை சொல்கிறார். நண்பர்கள் விசாரித்துவிட்டு மோகன் பாபுவின் பெயர் சீட்டிங் பாபு அவர் இதுபோன்ற கார் திருடும் வேலையை தனது தொழிலாக வைத்துக் கொண்டுள்ளார், இதுபோன்று கார்களை திருடி பலமுறை காவல் நிலையத்திற்கும், சிறைக்கும் சென்று வருகிறவர் என தெரிவிக்கின்றனர். காரின் உரிமையாளர் எப்படியாவது நேரில் சென்று, சீட்டிங் பாபுவிடம் கேட்டு காரை வாங்கி வந்துவிடலாம் என நம்பிக்கையோடு நண்பர்களின் உதவியோடு குடவாசலிற்கு செல்கிறார்.
குடவாசல் சென்ற காரின் உரிமையாளர், சீட்டிங் பாபுவை தொடர்பு கொள்ளும்போது தான் வெளியூர் சென்று இருப்பதாக சொல்லி தொலைபேசியை அணைத்து விடுகிறார். மூன்று நாட்கள் தன்னுடைய காரை நண்பர்களோடு குடவாசல் முழுவதும் தேடிக் கொண்டிருக்கையில், பொக்கை மணி என்ற ஒரு நபரிடம் தன்னுடைய கார் இருப்பதை, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த கார் புரோக்கர் ஒருவரின் மூலம் தெரிந்து கொள்கிறார். எனது நண்பர்கள் அந்த காரை விலைக்கு வாங்குபவர்கள் போன்று பொக்கே மணியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.
பொக்கை மணி Ertiga காரைத் தவிர வேறு பல கார்களின் புகைப்படங்களை WhatsAppல் அனுப்பி இதில் எந்த கார் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்கிறார். தனக்கு தகவல் கொடுத்த புரோக்கர் இடம் உன்னுடைய Ertiga காரை விலைக்கு கேட்கிறார்கள் என்று சொல்ல சொல்கிறார், அதற்கு பொக்கை மணி அந்த Ertiga கார் ஒரு பிரச்சனையில் உள்ளது அதை இப்போது விற்க முடியாது என்கிறார்.
தன்னுடைய கார் குடவாசலில் மறைத்து வைத்திருப்பதை காரின் உரிமையாளர் தெரிந்து கொண்டு அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதரிடம் விவரத்தை சொல்லி சீடிங் பாபுவிடம் இருந்து என்னுடைய காரை பெற்றுத் தரும்படி வேண்டுகிறார். அந்த பெரிய மனிதர் சீட்டிங் பாபுவை வரவழைத்து கேட்கையில், இந்த காரை 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு அடமானத்திற்கு பெற்றிருப்பதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் காரை திருப்பி தருவதாகவும் சொல்கிறார். பத்து நாட்களுக்கு மேல் இந்த காரை தேடி அலைந்து சோர்ந்து போன காரின் உரிமையாளர் வேறு வழியில் இன்றி சீட்டிங் பாபு கேட்ட இரண்டு லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய சொந்த காரை மீட்டு சென்னை திரும்புகிறார்.
சீட்டிங் பாபு பொக்கை மணி இருவரும் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு இது போன்று கார்களை திருடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.