தென்காசி மாவட்டம் பிரபல சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு மிக அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சபரிமலைஐயப்பன் கோவில், மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவில் சென்று வரும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களில் உள்ள முக்கிய திருமண விழாக்கள் நடைபெறும் இடமாக மட்டுமில்லாமல்.. நன்னகரம் மேலகரம் காசிமேஜ்புரம், இலஞ்சி ஆகிய சுற்று வட்டார பகுதி மக்களின் வாக்கிங் செல்லும் இடமாகவும் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்லும் காசிமேஜர்புரம் மின் நகர் இணைக்கும் சாலையில் திருவிலஞ்சி குமார கோவிலின் பின்புறம் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கே பல்லாண்டு காலமாய் பழுதடைந்த ஒற்றைப் பாலத்தை புதிய பாலமாக கட்டித்தர பக்தர்களிடமிருந்து பல நாட்களாக கோரிக்கை வந்ததை அடுத்து 13 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டுமானப் பணி நீண்ட நாட்களுக்குப் பின் அதிகாரிகளின் கருணையால் கட்டுமானம் துவங்கப்பட்டது.
ஆனால் பல மாதங்களைக் கடந்து கட்டி முடிக்கப்பட்ட பாலம் இன்னும் முழுமை அடையாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருப்பது சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பக்தர்களையும், பாதசாரிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்றுவர ஏதுவாக தற்காலிக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும்…
அதிலும் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்ற அவல நிலையும் அரங்கேறி வருகிறது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வேன்கள், சுற்றுலா பேருந்துகளில் வருபவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றித்தான் வந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி மாலை வேலைகளில் இந்தச் சாலைகளில் நின்று கொண்டு பெண் வேடமிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து அரங்கேறும் நிலை இருந்து வருகிறது. மேலும் பலர் நடிகர்கள் விஜய்,விவேக் பட பாணியில் TAKE DIVERSION ஆகி பாதை மாறிச் சென்று விடுகின்றனர்.
கடந்த ஐயப்ப சிசனுக்கு வந்தவர்கள் இந்த ஐயப்ப சிசனுக்கு வந்த போதும் பாலம் பணி நிறைவடையாததை கண்டு பக்தர்கள் நக்கலும் நையாண்டிமாக ஆண்டவன் கடைக்கண் பட்டும் அதிகாரிகள் முழுக்கண் படாதது என்ன காரணமோ…? கடவுளிடமிருந்து கமிஷன் பாக்கி வரவில்லையோ..? என்னவோ..? என்று அங்கலாய்த்து சென்று கொண்டிருப்பது சிந்திக்க வேண்டிய விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது.
எப்போது (விடியும்) முடியும்.