நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிறுவர்கள் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்தனர். அன்னை இந்திரா நகரை சேர்ந்த சிறுவர்களை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி ஐபிஎஸ் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் அவர்களை படிப்பிலும், விளையாட்டிலும் சரியாக செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பாதையை அடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் முத்துலிங்கம் கூறுகையில், “அன்னை இந்திரா நகரை சேர்ந்த சிறுவர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி ஐபிஎஸ் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அவர் நினைத்திருந்தால் மைதானத்திலேயே விளையாட்டு உபகரணங்களை கொடுத்திருக்கலாம். ஆனால் எங்கள் பகுதி சிறுவர்களைமதித்து அனைவரையும் அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். நாங்கள் கமிஷனரின் அலுவலகத்திற்கு சென்றோம். டீ பிஸ்கட் உள்ளிட்டவற்றை கொடுத்து உபசரித்தார். அதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு உபகரணங்களை தந்து நன்றாக படிக்க வேண்டும், விளையாட வேண்டும் என எங்கள் பகுதி சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தை மறு சீரமைப்பு செய்து தருவதாகவும் சமுதாய நலக்கூடத்தை படிப்பதற்கு ஏற்றார் போல் உயர்தரத்தில் மாற்றி தருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்கள் பகுதி சிறுவர்களுக்கு தேவையான உணவு உடை படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் அனைத்தையும் செய்து தர தான் தயாராக இருப்பேன் எனவும் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் அவர் கூறினார்” என தெரிவித்தார். இவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் தன்னுடைய சொந்த வீட்டை மாணவர்களும், இளைஞர்களும் படித்து பயன் பெற பாலா படிப்பகம் என்றதொரு வாசிப்பு சாலையை உருவாக்கியிருக்கிறார்.