சென்னைபெருநகரகாவல் தேசிய போக்குவரத்து 35 வது மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை,போக்குவரத்து பெருநகரம் காவல் அண்ணா நகர் உட்கோட்டம் வடக்கு மாவட்டம் ரெட்டேரி சிக்னல் முதல் ராஜமங்கலம் சிக்னல் வரை நூற்றுக்கு மேற்பட்ட பி.எஸ்.எம். வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பேண்ட் வாத்திய இசை முழங்க (ராலி) பதாகைகள் ஏந்தி நடை பயண பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் அ.சுந்தர்ராஜன் கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் காசி விஸ்வநாதன் அவர்களது தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி ஆய்வாளர் வில்சன் கிருபா ராஜ் மற்றும் ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சாலை ஓரம் கடையில் வியாபாரம் செய்ய செல்லும் பொழுது ரோட்டில் வாகனத்தை நிறுத்தக்கூடாது, சிக்னல் போட்டவுடன் வாகனத்தை நிறுத்த வேண்டும் மீறி செல்லக்கூடாது, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் வாகனம் அளவுக்கு மீறி அதிவேகமாக பயணம் செய்யக்கூடாது என்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் சாலை விதிகளை பின்பற்றுமாறு பல்வேறு அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்தனர்.