தென்காசி மாவட்டத்தில் வடகரை கீழ்படாகை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு இயங்கும் சுந்தரபாண்டியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் மத்தளம் பாறை, சில்லறைபுரவு, ஆயிரப்பேரி, பாட்டப்பத்து ஆகிய நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி இங்குள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணிகள் தினசரி இங்கிருந்து தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், கர்ப்பிணிகள், தொற்றநோய் பிணியாளர்கள், மற்றும் நாய் கடி பாம்பு கடியால் பாதிப்புக்குள்ளானோர்.
கிட்டத்தட்ட மத்தளம் பாறைக்கு பயணிக்க சுமார் 12 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலையும் . சுந்தரபாண்டியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல 10 கிலோமீட்டர் ஆவது பயணம் செய்ய வேண்டியஅவல நிலையும் உள்ளது. மேற்கண்ட இடங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல போதிய வாகன வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் மருத்துவத்திற்காக தென்காசி நகரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையே நாட வேண்டிய சூழ்நிலையால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் இன்ன பிற நோயால் பாதிக்கப்பட்டோர் வந்து ஒரே இடத்தில் மருத்துவம் பார்க்க வருவதால் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை பல சமயங்களில் நிரம்பி வழியும் நிலையும் உள்ளது.
இதனால் கூடுதலாக புதிய அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு தேவையான மக்கள் தொகை கொண்ட மைய பகுதியாக இருப்பதினால் ஆயிரப்பேரி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்தால் பெரிதும் போக்குவரத்து பாதிப்பின்றி கர்ப்பிணிகளும் சென்றுவர ஏதுவாக இருக்கும் எனவும் இப்பகுதி மக்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.