தென்காசி நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் மிக அருகில் அமைந்துள்ள ரயில் நகர் குடியிருப்பு பகுதியில் தான் இந்த அவல நிலை…
பல ஆண்டு காலமாக ரயில் நகர் பகுதியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை கருத்தில் கொண்டு குடும்பங்களில் ஆட்படும் மனக்குமுறல்களை தணிக்கும் வகையிலும் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் குழந்தைகள் விளையாடி மகிழவும், பெரியவர்கள், குடும்பப் பெண்மணிகள், மனதில் உள்ள குறைகளை குடும்பத்தார்களிடம் கொட்டித் தீர்த்திடவும் மரம், செடி, கொடிகள் நிறைந்த ஒரு இயற்கைச் சூழலோடு மனதில் உள்ள பாரங்களை தனக்குத்தானே ஆற்றிக் கொள்ளவும் இரயில் நகர் 4 வது தெருவில் நகராட்சிபூங்கா அமைக்கப்பட்டது ஆனால் அந்த நோக்கம் ஏதும் இன்று வரை நிறைவேறாமல் தற்போது புதர்கள் மண்டி பாம்புகளும் பல்லிகளும் குடிகொண்டிருக்கும் காடுகளாக காட்சியளிக்கிறது.
அங்குள்ள ஊஞ்சல் போன்ற குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் கூட எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. இப்பகுதி மக்கள் பல நாட்களாய் கோரிக்கை வைத்தும் யாராலும் இதை சரி செய்து கொடுக்க முடியவில்லை என்ற குமுறலை தேர்தலில் கொட்டி தீர்க்க வேண்டுமென கங்கணம் கொண்டு காத்திருக்கிறார்கள்.
கண்ணிருந்தும் குருடாய்… காதிருந்தும் செவிடாய்.. நகராட்சி நிர்வாகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.