சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நபர்களை தாக்கி கொள்ளையடித்துச்சென்றது தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் எதிரிகளை கண்டுபிடிக்க தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன் IPS, Dr.M.துரை, IPS,(காவல்துறை துணைத்தலைவர்) மற்றும் சிவகங்கை SP B.K.அர்விந்த், IPS, அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட DSP சிபிசாய் சௌந்தர்யன் அவர்களது மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையில் காளையார்கோவில் காவல்நிலைய ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, சந்திரமோகன், இரவீந்திரன் மேலும் சார்பு ஆய்வாளர்கள் சரவணக்குமார், ஹரிகிருஷ்ணன், குகன், பிரதாப், ரூபன்ராஜ் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட DSP ஆத்மநாதன் தலைமையிலான இராமநாதபுரம் சரக புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காளையார்கோவில் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி அவர்களின் மாறுதலுக்குப்பின் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆடிவேல் அவர்கள் மற்றும் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திரைவேல் மற்றும் SI சரவணக்குமார் அடங்கிய அணியினர் பழங்குற்றவாளிகளை விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான தினேஷ்குமார் என்பவரை விசாரணை செய்த போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதின் பேரில், கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தில், பண தேவைக்காக கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் காளையார்கோயில் கல்லுவலி கிராமத்தைச்சேர்ந்த கணபதி என்பவர் கொடுத்த தகவலின் பேரில், முடுக்கூரணி கிராமத்தில் இருவரை அடித்து கொலை செய்து கொள்ளை அடித்ததாகவும், மேலும் இரு பெண்களையும் தாக்கி கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும், இதேபோல் கல்லுவலி கிராமத்தில் நோட்டமிட்டு வீட்டிலிருந்த ஐவரையும், தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் தீவிர விசாரணையை மேற்கொள்ள காவல் துறையினர், கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை கைப்பற்றியதுடன் இவ்வழக்கு தொடர்பாக தினேஷ்குமார், கணபதி மற்றும் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட மேற்குறிப்பிட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், IPS, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் Dr.M.துரை, IPS, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.K.அர்விந்த், IPS ஆகியோர் கலந்து கொண்டு தனிப்படையினரை பாராட்டினார்கள்.