உலக சமூக நீதி நாளை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் சமூக நீதி, மனித உரிமை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு சமூக நீதி மற்றும் மனித உரிமை என்ற தலைப்பில் மனித உரிமைகளான வாழும் உரிமை சமத்துவ உரிமை சுதந்திர உரிமை தனிநபர் மாண்பு மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் தேசிய மனித உரிமை ஆணையம் செயல்பாடுகள் குறித்தும் தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடை சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் வரதட்சனை தடுப்பு சட்டம் பணித்தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மேலும் பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண் 1930 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதலட்சுமி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் முருகவேல் ஆகியோர் பெண் கல்வியின் அவசியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மற்றும் சட்டம் குறித்தும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். காவல் உதவி ஆய்வாளர் சுசீலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.