கலி முத்திடுச்சு…. கலிகாலம் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆகும்.
கி.பி 300 முதல் 600 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்தது களப்பிரர்கள் என்று புனையப்பட்ட களப்பறையர்கள் ஆகும். இதை வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. இவர்களின் ஆட்சிக்காலம் தமிழர்களின் பொற்காலம் என்றும் கூறுகிறது. எப்போதும் போல் வரலாற்றை மாற்றிய வர்களால், இவர்களின் காலத்தை இருண்டகாலம் என்று புனையப்பட்டது.
காரணம், சேர, சோழ , பாண்டியர்களை ஒடுக்கி இவர்களால் போற்றப்பட்ட பார்ப்பனர்களையும் ஒடுக்கி, அவர்களுக்கு அழித்துவந்த மானியங்களையும் நிறுத்தி பார்ப்பனர்களை அனைவரையும் போன்று அனைத்து வேலைகளையும் செய்ய பணிக்கப் பட்டார்கள்.
களப்பறையர்களின் காலம், சங்ககாலம் என்றும் அறியப்படுகிறது. இக்காலகட்டத்தில் தான் நாலடியார், நாண்மனிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறபஞ்சமூலம், ஏலாதி, மற்றும் அகத்தியம், அபிநயம், அபிநந்தமாலை, ஆன்மவியல், ஆட்சிநூல், இந்திரம், இளந்திரையம், ஐந்திரம், இந்திரதேசம், சாதவாகனம், சாதவாகனம், திருக்குறள் முழுவுரை, சங்க யாப்பு, பல்காப்பியம், காப்பியவரலாறு, தமிழ்தேசம், மாபுராணம், சிவமாலை, பிணமாலை, அரிச்சந்திரபறையானார் சரிதம். போன்ற படைப்புகள் படைக்கப் பட்டது.
இவைகளுக்கு, இளம்பூரனார், சேனாவரையார், அடியாருக்கு நல்லார், சம்புவராயப் பெருமான், போன்ற இலக்கிய கர்த்தாக்கள் உரை எழுதி உள்ளனர். இக்காலத்தில்தான் திராவிடச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில்தான் தமிழ் சங்கமும் புதுப்பிக்கப்பட்டது.
களப்பறையர் தலைவர்களில் புகழ் மிக்கவர் கலியன் என்ற மன்னன் ஆகும். இவனை வெல்ல முடியாமல் மூவேந்தர்களும் இவனை பணிந்து போற்றிப் பாடியதாக வரலாறு உண்டு.
இவர்களின் வீரத்தை யாப்பிலக்கணம் கீழ்க்கண்டவாறு பாடுகிறது.
“படுபருந்தும் தூர்பேயும் பல்லிலங்கும்
நாயும் கொடியும் கழுகுமிவை கூடி
வடிவுடைய கோமான் களப்பாளன் கொல்யானை
போமறு போமறு போமறுபோம் “
என்கிறது. அதாவது, களப்பறைய அரசர்கள் போருக்கு செல்லும்போது யானை சேனைகளோடு, அங்கு விழும் பிணங்களை உண்பதற்கு நாய், நரி, பருந்து ,கழுகு, அதோடு பேய்களும் உடன் வரும் என்கிறது பாடல்.
காரணம், களப்பறையர் படைகள் போருக்கு சென்றால், வெற்றியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதாகும்.
கலியனின் ஆட்சியையே ஆரியர்கள் பயந்துபோய் கலிமுத்திடுத்து என்று அலறத் தொடங்கினார்கள்.
பத்தாண்டு ஆட்சியிலேயே இந்திய வரலாற்றையே புரட்டி போடுவதற்கு தயாராகும்போது, முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்த பறையர்கள் எப்படி இருந்திருப்பார்கள்.
இதைத்தான் நமது பெண் கவி முப்பாட்டி ஔவை…
“பார்ப்பானுக்கு மூப்பான் பறையன்;
கேட்பாரற்று கீழ் சாதியானான்.” என்றார்.
களப்பறையர் ஆட்சியின் சுருக்கமே.
- சோலை:சின்னச்சாமி.
- பறையர் சமூக வரலாற்று எழுத்தாளர்.