தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துறவிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகண்ணு. இவர் தற்போது 100 வயது நிறைவடைந்து பிறந்த நாளை கொண்டாடினார். சுமார் 25 பேரன் பேத்திகள், கொள்ளு பேரன்கள் இந்த 101 வயது நிரம்பிய விவசாயி முதியவரை அழைத்து வந்து குதிரை சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள். அரசியல் கட்சித்தலைவர்கள், கிராம பெரியவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு 101 வயது முதியவரிடம் ஆசிர்வாதம் பெற்றார்கள். விழாக்கோலத்தில் அந்த கிராமம் வாழ்த்துக்களோடு இந்த விழாவை கொண்டாடியது.