தென்காசி நகராட்சி ஐந்தாவது வார்டு மங்கம்மா சாலை பகுதியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தெருவின் நிலைதான் இது ஆண்டுகள் கடத்தும் நீடிக்கும் அப்பட்டமான மேய்தாவித்தனம்…,
இங்கு முறையாக தெருச்சாலைகள் அமைவதற்கு முன்பே ஏற்படுத்தப்பட்ட மின்சார மின்கம்பங்கள், மற்றும் மின்மாற்றிகள் சாலை வசதி ஏற்படுத்தும் முன்பு மின்சார வாரியத்திற்கு முறையாக தெரியப்படுத்தி மாற்றி இருக்க வேண்டும். ஆனால் சாலை காண்ட்ராக்டர்கள் நகராட்சிக்கு முறையாக தெரியப்படுத்தி மின் கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைத்த பின் சாலைகளை அமைத்திருக்க வேண்டும் அதனை அந்த வார்டு கவுன்சிலர்கள் கண்காணித்து முறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மக்களைப் பற்றி மக்களுடைய நலன்களைப் பற்றி கவலை கொள்ளாத ஒரு போக்கிற்கு இந்தச் சாலை சாட்சியாக நிற்கிறது. ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ, விபத்து காலங்களில் தீயணைப்பு வாகனங்களோ, 108 போன்ற ஆம்புலன்ஸ்களோ, எளிதில் நுழைந்து விட முடியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமாக இந்த தெரு அமைக்கப்பட்டுள்ளது என்று வாகன ஓட்டிகளாலும், புதிதாக அந்த சாலையில் பயணிக்கும் நபர்களாலும் “அதி புத்திசாலிகள் ஆளும் மங்கமாச்சாலை” என்ற பாராட்டுச்சொல் காதில் விழுகிறது.
இரவு நேரங்களில் இந்தப் பகுதி மக்கள் தன்னுடைய வாகனங்களை கொண்டு செல்வதற்கும்.. டிராக்டர், கார், போன்ற வாகனங்கள் வந்து செல்வதற்கும் முடியாமல், பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வர முடியாமல் தெருமுனையில் தட்டி உள்ளதாக குமுறுகிறார்கள்… இந்த அவல நிலை பற்றி வார்டு கவுன்சிலர் கவனத்திற்கு கொண்டு சென்றும் வாக்கு வங்கிகளை பிரித்தாலும் நோக்கம் தான் தென்படுகிறது என்று கொந்தளிக்கின்றனர்.
சபதத்திற்கு பெயர் போன மங்கம்மா பெயர் கொண்ட சாலைக்கு இந்த நிலை என்றால்… சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டை கடந்தும் தலித் மக்கள் அதிக வாழும் பகுதிகள் இன்னும் வளர்ச்சி அடையாத பின் தங்கிய மாநிலங்கள் போலவே காட்சியளிப்பது என்பது கேவலமான விஷயம் தான்..!