சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/ புனித தோமையர்மலை, காவல் ஆய்வாளர் திரு.சிவ ஆனந்த் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.வசந்தராஜா, திரு.ஹரிஹரசுதன், தலைமைக் காவலர்கள் திரு.சுரேஷ்குமார், திரு.ஸ்ரீஜித், திரு.தயாநிதி, திரு.இளைய பாரதிராஜா (த.கா.28652), S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர்கள் திரு.பெரிய கருப்பசாமி, திரு.ஞானவேல் என மொத்தம் 8 காவல் ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 34 காவல் ஆளிநர்கள் மற்றும் 1 இளநிலை உதவியாளர் என மொத்தம் 58 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை 31.05.2024 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/புனித தோமையர்மலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கஞ்சா கடத்தி வந்த வெளி மாநில குற்றவாளிகளை கைது செய்தும், S-7மடிப்பாக்கம் காவல் நிலைய குழுவினர் 6.1 கிலோ OG கஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை கைது செய்தும். மத்திய குற்றப்பிரிவு மற்றும் இதர சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.