திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.
தகுதிகள் :
- விண்ணப்பதாரர்கள் முன்னாள் படை வீரர்கள் அல்லது ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களாக இருக்க வேண்டும்.
- பணியில் சேரும்போது விண்ணப்பதாரர்களுக்கு வயது 62-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது மனுக்களை திருச்சி மாநகர காவல் ஆணையகர அலுவலகத்தில் வழங்குமாறும், விண்ணப்பதாரர்கள் பற்றிய நன்னடத்தை மற்றும் முன் வரலாறு தீர விசாரித்து தகுதி பெற்றவர்களுக்கு திருச்சி மாநகரத்தில் உள்ள 18 திருக்கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும்,
மேற்படி நியமிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.7,600/- தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.