பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக அலைமோதும் இந்த மாதத்தில் (ஜூன்) கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக முயலும் மாணவ, மாணவிகளுக்கு தொலைநோக்கு பார்வையுடன் அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தொழில் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார் தஞ்சை மறைமாவட்ட தொழிலாளர் நலப்பணிக்குழுவின் செயலாளர் அருட்தந்தை கி.விக்டர்தாஸ் அடிகளார்.
இந்த கருத்தரங்கை தஞ்சை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் உள்ள அருட்பணி மையத்தில் இம்மையத்தில் இயக்குநர் அருட்தந்தை ஜான்கென்னடி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
சென்னை தரமணியில் உள்ள (HRD) மனிதவள மேம்பாட்டு துறையின் துணை இயக்குநர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் மத்திய மாநில அரசின் வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கினார். குறிப்பாக தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் போட்டி தேர்வுக்கான இலவச தங்குமிடம், உணவு, பயிற்சி பற்றி விளக்கினார். மேலும் UPSC, SSC, RRC மற்றும் தமிழக அரசின் TNPSC பற்றியும் விளக்கினார். அதற்கான கல்வி தகுதி பற்றியும் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி படிப்பை முடித்த 20 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர். அவர்களில் சிலருக்கு கருத்தரங்கு மையத்திலேயே வேலைவாய்ப்பு உறுதிபடுத்தப்பட்டது.
இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் திரு.A.ஆனந்தன் மற்றும் ஆயர் இல்ல உதவியாளர் அகஸ்டின்ராஜ் உதவிகளை செய்தனர்.
நிறைவுரை ஆற்றும்போது திரு.A.விக்டர்தாஸ் அடிகளார் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த உலகம் போட்டிகள் நிறைந்தது. அதனால எதையும் எதிர்கொள்ளக் கூடிய மனநிலை வேண்டும் என்று முடித்தார்.