பணமே இல்லாதவன் பாவியா நல்லப்
பண்பே இல்லையா
பணத்தாலே உலகை ஆள எண்ணும்
மனப் பேய் மாறுமா
தீமை செய்யும் பெரிய மனிதர்
திரையால் மறைக்கிறார்
தவறைப் பணத் திரையால் மறைக்கிறார்
பாசம் அன்பு நீதி நேர்மையை
விலையால் வாங்குறார்
இந்த நிலைமை என்ற மாறுமோ
இதை நீயே கூறடா
இணைந்த உள்ளம் பிரியும்போது
இன்பமேதடா மனதில்
துன்பந் தானடா
பிறப்பில் உயர்வு தாழ்வு என்னும்
பேதமில்லையே உயர்
காதலில் பேதம் காணும் நிலைமை
என்று மாறுமோ
நாணயமென்பது பணமில்லை
நா கேடாதிருப்பது நாணயமே
சொல்லுஞ்சொல்லே நிலைத்தால்வரை
சுழலும் பூமியும் வணங்கிடுமே
–சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு,
பள்ளத்தான்மனை