கூட்டைத் தாண்ட துணியாமல்
சிறகுகள் கண்டம் தாண்டுவதெங்கே
மண்ணை முட்டித் தள்ளாமல்
விதைகள் விருட்சமாவதெங்கே
மேடு பள்ளம் தாண்டாமல்
நதிகள் கடலை சேர்வதெங்கே
பாரம் அழுத்தம் தாங்காமல்
மரக்கரிகள் வைரமாவதெங்கே
உளியின் கூர்மை பொறுக்காமல்
பாறைகள் அழகு சிலையாவதெங்கே
அல்லும் பகலும் உழைக்காமல்
செல்வங்கள் தானாக சேர்வதெங்கே
நாளும் பிரபஞ்சம் சுழலாமல்
நாளும் உயிர்கள் வாழ்வதெங்கே
துன்பம் சோதனை எதிர்கொள்ளாமல்
வாழ்வில் இன்பம் காண்பதெங்கே
உன்னால் முடியும் நம்பாமல்
உன் முன்னேற்றபாதைகள் தெரிவதெங்கே!
– மீனாட்சி வெங்கடேஷ்