கடலூர் நகராட்சி 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2022-ல் நடந்த தேர்தலில் சுந்தரி ராஜா முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில், சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரது மனைவி அனு ஐஏஎஸ், கடலூர் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அனு ஏற்கனவே தமிழக அரசின் துணை செயலாளராக பணியாற்றி வந்தவர்.
கணவர்-மனைவி ஒரே மாவட்டத்தில் இவ்வாறு முக்கிய பதவிகளில் இருப்பது இதுவே முதல்முறை. இந்த அரிய நிகழ்வால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியடைந்து, இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இச்செய்தி சமூக ஊடகங்களிலும் பெரும் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
இந்த நியமனங்கள் கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கணவர்-மனைவி இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், மாவட்டத்தின் நிர்வாகம் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.