வாழ்க்கை நல்வழி காட்டுகிறது
விதியை ஏற்காத மனதிற்கு!
வாழ்க்கை மலர்பாதை அமைக்கிறது
வீட்டில் முடங்காத பாதங்களுக்கு!
வாழ்க்கை பூங்கொத்து கொடுக்கிறது
முயற்சியைக் கைவிடாத கரங்களுக்கு!
வாழ்க்கை பொன்னொளி தருகிறது
வைகறையில் உறங்காத விழிகளுக்கு!
வாழ்க்கை மணம் வீசுகிறது
தோல்விகளில் துவளாத உள்ளங்களுக்கு!
வாழ்க்கை தென்றல் வீசுகிறது
வியர்வைக்கு அஞ்சாத உழைப்பாளர்களுக்கு!
வாழ்க்கை வெற்றிவாகை சூடுகிறது
வாழ்க்கைப்போருக்கு அஞ்சாத வீரர்களுக்கு!
வாழ்க்கை மாற காத்திருக்கிறது
நம்பிக்கையை விடாத நெஞ்சங்களுக்கு!
வாழ்க்கை மெல்ல வசம் ஆகிறது
அனுபவங்களைத் தள்ளாத அனுபவசாலிகளுக்கு!!
– மீனாட்சி வெங்கடேஷ்