ஆளுக்கொரு திசையிலிருந்து ஆணும்பெண்ணுமாய் சேர்ந்து
அன்பையும் ஆசையையும் இருபக்கங்களிலும் கலந்து
உறவையும் உழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து
உண்மையையும் நேர்மையையும் வெளிப்படையாய் தெரிந்து
இன்பத்தையும் துன்பத்தையும் கண்ணீரில் விதைத்து
இருமனமும் ஒருமனமாய் ஒற்றுமையில் உயர்ந்து
உண்ண உணவும் உடுக்க உடையுமெடுத்து
இருக்க இருப்பிடமும் கஷ்டத்தில் கண்டெடுத்து
குலம்வாழ குத்துவிளக்காய் குடும்பத்தை கலசமாக்கி
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக தங்களையே தானமாக்கி
ஆணும் பெண்ணுமாய் அவதாரம் எடுத்து
கணவன் மனைவியாய் கல்யாணம் முடித்து
தாயும் தந்தையுமாய் தவழும் குழந்தைகளை காத்து
பெற்றோர்களாய் பொறுப்புடன் கற்றோர்களாய் வளர்த்து
வாழ்வாங்கு வாழ்ந்திட செய்தவர்கள் பெற்றோர்கள்
வாழ்ந்திடும் தருணத்தில் வாழ்த்திடுவோம் பெற்றோர்தினத்தில்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்