திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு 01.08.2024 அன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் I.P.S., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் I.A.S., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., மற்றும் பலர் கலந்து கொண்டனர்..