சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் “ZERO ACCIDENT DAY” (ZAD) என்ற போக்குவரத்து விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சென்னை எல்லைக்குட்பட்ட சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்யவும், U திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை அறிமுகபடுத்தியதின் காரணமாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தனது பகுதிகளில் விபத்துகளின் அளவை குறைத்து வருகிறது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் செயல்முறை நோக்கமானது “ZERO IS GOOD” இதில் Zero என்பது Zero விதிமீறல், Zero சலான், Zero அபராதம் மற்றும் Zero விபத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளைக் குறைக்க. வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ZAD (ZERO ACCIDENT DAY) என்ற விரிவான மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை 20 நாள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தொடங்கியுள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 20 நாட்களுக்கு செயல்படும் மற்றும் 26.08.2024 அன்று “ZERO ACCIDENT DAY” ஆக அனுசரிக்கப்படும்.
இந்த பிரச்சாரத்தின் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அணுகுமுறைகளும் அர்ப்பணிக்கப்படும். சென்னை பெருநகரில் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதும், அந்த நாளை “விபத்து இல்லாத நாளாக மாற்றுவதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் மற்றும் சாலைப் பயணிகளும் பொறுப்பாவர்களாகும்” என்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
இந்த ZAD (ZERO ACCIDENT DAY), 06.08.2024 அன்று, திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., கூடுதல்
காவல்துறை ஆணையாளர், போக்குவரத்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்
அவர்களால் பல்லவன் பேருந்து பணிமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், IAS, MD, MTC அவர்கள் சிறப்புரையையும், திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையாளர், போக்குவரத்து, பெருநகர சென்னை காவல்துறை அவர்களால் ZAD லோகோ வெளியீடு மற்றும் தொடக்க உரையையும் நிகழ்த்தினார்கள். மொத்தம் 12 முக்கிய பங்குதாரர்கள் சாலைப் பயனாளர்களாக அடையாளம் காணப்பட்டு, சாலையில் வாகனம் ஓட்டும்போது நடத்தையை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகம், போக்குவரத்துறை, IT நிறுவன ஊழியர்கள், கல்லூரிகள், ஆட்டோ/கேப் ஓட்டுநர்கள், E-காமர்ஸ் ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் முக்கிய பங்குதாரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த ZAD (ZERO ACCIDENT DAY) நிகழ்ச்சியில் டாக்டர். வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், பேராசிரியர், ஐஐடி மெட்ராஸ், டாக்டர். தவபழனி அழகப்பன் அவசரநிலை – HOD அப்பல்லோ மருத்துவமனை, சென்னை, டாக்டர். அருண் கண்ணன் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்பல்லோ மருத்துவமனை, சென்னை ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்கள் திரு.பண்டி கங்காதர், இ.கா.ப. காவல்துறை துணை ஆணையாளர் போக்குவரத்து, தெற்கு மாவட்டம், திரு.வி.பாஸ்கரன், காவல்துறை துணை ஆணையாளர் போக்குவரத்து, கிழக்கு மாவட்டம், மற்றும் திரு.குமார், துணை ஆணையாளர் போக்குவரத்து, வடக்கு மாவட்டம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.