திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 03.08.2024-ஆம் தேதி மாலை 04.40 மணியளவில், கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த TN 40 S 2238 என்ற பதிவெண் கொண்ட Ashok Leyland லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர் ஆனந்த் மற்றும் உடன் வந்த லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தேநீர் அருந்த சென்றுள்ளனர்.
பின்னர் மேற்படி லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் தேநீர் அருந்திவிட்டு லாரிக்கு வந்துகொண்டிருந்தபோது மேற்படி லாரியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அரிவாளுடன் இறங்கி ஓடியுள்ளனர். அவர்களை இருவரும் விரட்டி சென்ற போது லாரியில் இருந்து சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த வெளிர் பச்சை நிற TN36 BW 8666 Maruthi Suzuki Ertiga (Fake Registration Number) காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் ஓடி சென்று லாரியின் உள்ளே பார்த்தபோது கும்பகோணத்தில் காய்கறி லோடு இறக்கிவிட்டு வாங்கி வைத்திருந்த ரூ.50,68,200/- பணத்தை மேற்படி தப்பி சென்ற மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெட்டாவாய்த்தலை காவல் நிலைய குற்ற எண். 88/2024. ச.பி. 305(a) BNS-ன்படி வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், இகாப., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. கோடிலிங்கம் அவர்களின் மேற்பார்வையில். ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலசந்தர் அவர்களின் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்த நிலையில், 16.08.2024 அன்று மாலை 16.00 மணியளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் காரில் சுற்றி திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், மேற்படி தனிப்படையினர் நவலூர்குட்டப்பட்டு அரியாற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்ருந்த காரின் அருகே சென்றபோது காரில் இருந்து இறங்கி ஓடி அரியாற்று பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ஐந்து நபர்களையும் தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் மேற்படி நபர்களை தீவிர விசாரணை செய்ததில், 1) பிரவீன் குமார் 25/24, S/o முத்துராமலிங்கம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, 2) போஸ் @ இசக்கிமுத்து 25/24, S/o மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம், 3) வெள்ளை பாண்டி 22/24, S/o தங்கப்பாண்டி. வருங்கால்குறிச்சி, நாங்குநேரி. திருநெல்வேலி, 4) முத்து மணிகண்டன் 25/24) S/o அருணாச்சலம், மேல காடுவெட்டி திருநெல்வேலி மற்றும் 5) சூர்யா @ உதயநிதி 27/24, S/o சத்தியமூர்த்தி, திடீர் நகர் மதுரை மாவட்டம் ஆகிய ஐந்து நபர்களும் மேற்படி வழக்கின் எதிரிகள் என தெரிய வந்ததை அடுத்து அவர்களிடம் இருந்து லாரியில் இருந்து திருடி சென்ற பணத்தில் ரூ. 26,00,000/-ஐ மீட்டும், மேற்படி குற்ற சம்பவத்தில் பயன்படுத்திய காரினை கைப்பற்றியும், எதிரிகள் ஐந்து நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.