தஞ்சையில் கடந்த மாதம் நடந்த உயிரிழப்புகளில் முக்கியமானது மாநகராட்சியின் 36வது வார்டில் நடைபெற்ற 2 தொழிலாளர்களின் உயிரிழப்பு. தற்போது வரை அந்த இடம் சரிசெய்யாமலேயே உள்ளது. மேலும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாமலேயே தோண்டிய குழியை மாநகராட்சியினர் மூடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் மினரல் வாட்டர்கேன் வாங்கி உபயோகிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க சாந்தபின்னை கேட்டின் மும்முனை சந்திப்பில் உள்ள தேநீர் கடையால் ஏற்படும் விபத்தினை காவல்துறை கவனிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.
இந்த தேநீர் கடையின் இருபுறமும் மரக்கிளைகள் சாலையை மறித்தவாறு வளர்ந்து உள்ளது. இதன் நிழலில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன்வழியாக 108 ஆம்புலன்ஸ்ம் அடிக்கடி செல்கிறது. இங்கு அடிக்கடி சிறுசிறு சாலைவிபத்து உயிரிழப்பின்றி நடைபெறுகின்றது. இங்கு காவல்துறையினர் தேநீர் அருந்த வருகின்றனர். ஆனால் போக்குவரத்தை சரிசெய்ய எண்ணவில்லை. ஆனால் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை விருந்தினர்களை போல் வரவேற்று வாகனங்களை ஓரமாக நிறுத்துமாறு “கனிவுடன்” தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி பொதுமக்களின் கருத்து காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை கவனிக்கின்றார்களா? அல்லது மற்றவர்களால் கவனிக்கப்படுகிறார்களா? என்பதே எண்ணமாக உள்ளது. அந்த மதுபானகடை தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு உட்பட்டது.