காவல்துறையின் கடினமான பணிகளுக்கு இடையே தனது மனிதாபிமான செயல்களையும் செய்துள்ளார் தஞ்சை மருத்துவமனை மருத்துவகல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்கள். தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மருத்துவகல்லூரி காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆதரவற்று இறந்த 12 நபர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளார்.
12 நபர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் வடக்குவாசல் ராஜகோரி மயானத்திற்கு கொண்டு சென்று அங்கு தூய்மை பணியாளர்களின் உதவியுடன் தனித்தனியாக குழிதோண்டி அடக்கம் செய்யப்பட்டது.