தமிழக முழுவதும் டாஸ்மார்க் மது விற்பனை நிர்ணயித்த நேரபடி மதியம் 12 ல் இருந்து இரவு 10 மணிவரை அல்லாமல் அதிகப்படியாக மீதி நேரங்களில் பார்களில் கள்ளத்தனமாகமது விற்பனை செய்யக்கூடாது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது அதன்படி திருப்பூர் மாநகரத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் ஆணையர் திருமதி. லட்சுமி IPS அவர்கள் அதிரடி நடவடிக்கை உத்தரவினால் காவல்துறையினர் மாநகரப் பகுதிகளில் டாஸ்மார்க் பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறாமல் நடவடிக்கை மேற்க்கொணடுவருகின்றனர்.
ஆகையால் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் குடிமகன்களில் அட்டகாசத்தில் இருந்து சாலைகளில் சொல்லும் பொதுமக்கள் அச்சுறுத்தலலிருந்து விடுபட்டுள்ளனர் குடிமகன்கள் அட்டகாசம் சனி, ஞாயிறு இரவு நேரங்களில் குடித்துவிட்டு போதையில் சமூக விரோதிகள் சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது கட்டுபடுத்தபட்டுள்ளது. குடிமகன்களால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிபகுதிகளில் சனி, ஞாயிறு என்றால் குடிமகன்களால் வெட்டு குத்து சம்பவங்கள் அதிகப்படியான கேசுகள் வரும். அது கட்டுபடுத்தபட்டுள்ளது. அதனால் பணிச்சுமைகள் குறைந்து உள்ளதாகவும் மேலும் பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாகன சாகச நிகழ்ச்சிகளை மது பிரியர்கள் குறைத்துள்ளதாகவும், இதனால் காவல்துறை நண்பர்களுக்கு பணிச்சுமை குறைவால் மன உளைச்சல் குறைந்துள்ளதாகவும் காவல்துறை மத்தியில் பரவலாக பேசப்படுகிறது மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி. லட்சுமி IPS அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ண்ம் உள்ளன.