வேதாரணியம் உட்கோட்டம் காரியாபட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு வழியன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் வயசு 65. கணவர் பெயர் குருசாமி. அரசு உயர்நிலைப்பள்ளி மருதூர் வடக்கில் துப்புரவாளராக பணிபுரிந்து வருகிறார்.
29.08.2024 அன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு, அப்பா பெயர் முருகையன், நாகம்மாளின் பேரன் கபிலனின் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நாகம்மாள் வேலை செய்யும் அரசு உயர்நிலைப்பள்ளி மருதூர் வடக்கு சென்று அழைத்து வந்து வந்துள்ளார். அப்போது ராஜாக்கண்ணு நாகம்மாலிடம் தான் பிராந்தி வாங்கி வைத்துள்ளேன். உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விட்டவுடன் அருகில் உள்ள ஆர்எஸ் பதி காட்டிற்குள் வந்துவிடு. யாருக்கும் தெரியாமல் மதுவை தருகிறேன் என்று சொல்லி உள்ளார். அதற்கு அவர் சம்மதித்துள்ளார்.
பிறகு நாகம்மாளை வீட்டில் விட்டுவிட்டு வாகனத்தையும் அவரது வீட்டில் போட்டுவிட்டு ராஜாக்கண்ணு அருகில் உள்ள ஆர்எஸ் பதி காட்டிற்கு பின்புறம் பிராந்தியோடு காத்திருந்துள்ளார். வீட்டிற்கு வந்த நாகம்மாள் தான் வைத்திருந்த மணி பர்ஸ் பேக்கை தனது வீட்டில் வைத்துவிட்டு காட்டுப்பக்கம் சென்றுள்ளார். வீட்டில்அங்கு மருமகள் தமிழரசி இருந்துள்ளார். ஆர்எஸ் பதி காட்டின் பின்புறம் சென்றுள்ளார். அங்கு ராஜாக்கண்ணு பிராந்தியோடு நின்றுள்ளார் அருகில் காட்டுக்குள் நாகம்மாளை அழைத்துச் சென்று மதுவை காட்டியுள்ளார்.
பிறகு நாகம்மாளை ராஜாக்கண்ணு சத்தம் போடாத அளவிற்கு வாயைப்பொத்தி தான் வைத்திருந்த கத்தியால் இடது வயிற்றில் குத்தியுள்ளார். பிறகு தொண்டையின் நடுவில் கத்தியால் குத்தி நாகம்மாள் அணிந்திருந்த தங்கச்செயினையும் இரண்டு மாட்டலோடு உள்ள தோடுகளையும் அறுத்துக் கொண்டு நாகம்மாளை கொன்றுவிட்டு சென்றுள்ளார்.
இக்கொலை தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காரியாப்பட்டினம் காவல்ஆய்வாளர் ஜெயந்திர சரஸ்வதி காவல்குழுவினர் விசாரணை மேற்கொண்டு 24 மணிநேரத்திற்குள் குற்றவாளி ராஜாகண்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் ராஜாகண்ணு கடன் தொல்லையில் இருந்துள்ளார். இரண்டு நாளுக்கு முன்பு பஞ்சநதி குளம் சுரேஷ் என்பவரிடம் ஓரிடத்தில் நகையை அடகு வைத்துள்ளேன். அதை மீட்டு உங்களிடம் தருகிறேன் எனக்கு 85 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நம்பி சுரேஷ் என்பவர் பணம் கொடுத்துள்ளார்.
பிறகு அதை ராஜாக்கண்ணு பெற்றுக்கொண்டு ரூபாய் 55 ஆயிரத்தை தனது கொழுந்தியாளிடம் கொடுத்துள்ளார். மீதி 30 ஆயிரத்தில் மல்லிகா என்பவரிடம் கொலுசு வாங்கி அடக்க வைத்த இடத்தில் 3000 கொடுத்து திருப்பி மல்லிகாவிடம் கொடுத்துள்ளார். மீதி இருந்த பணத்தை செலவுக்கு வைத்துள்ளார். பணம் கொடுத்தவர் சுரேஷ் என்பவர் தனது போனின் மூலமாக மறுநாள் ராஜாக்கண்ணுவிடம் நகை கேட்டுள்ளார். மறுநாள் கண்டிப்பாக தருகிறேன் என்று சொல்லியுள்ளார்.
அப்போதுதான் ஏற்கனவே திட்டமிட்டபடி நாகம்மாளை கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்து சுரேஷ் கடனை அடைத்துவிட முடிவு செய்து திட்டமிட்டபடி நாகம்மாள் வீட்டிற்கு பின்புறம் உள்ள ஆர்எஸ் பதி காட்டில் ராஜா கண்ணு பிராந்தி தருவதாக வரச் சொல்லி கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.