சங்கரன்கோயில் வட்டம் பெரியசாமியாபுரம் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக 25 பிரிவின் கீழ் செம்பியன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் சீனியர் பிரிவுக்கான போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் (UT) தமிழ்இனியன் மற்றும் பள்ளியின் தாளாளர் கோபால் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக வாய்ஸ் ஆஃப் தென்காசியின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள், திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் அருணாச்சலம் அவர்கள், தலைமை நிர்வாகி முனைவர் ஸ்வர்ணலதா மற்றும் ஆயாள்பட்டி ஸ்ரீ மகாலட்சுமி அம்மாள் சமேத மகாவிஷ்ணு திருக்கோவில் அறங்காவலர் காளிப்பாண்டியன் அவர்கள், கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். குறைந்தபட்சம் 500 மீட்டர் அதிகபட்சம் 21 கிலோமீட்டர் என ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக பள்ளி மாணவர்களுக்கு 8 பிரிவுகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 4 பிரிவுகளிலும், 30 வயதுக்கு மேற்பட்டவருக்கு 8 பிரிவுகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 6 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் காவல்துறையின் சார்பில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு சமூக நெறிகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிலம்பம், பரதம் என கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா துவங்கியது. வாய்ஸ் ஆஃப் தென்காசியின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் சுபாஷ் டிவி உரிமையாளர் திரு சந்திரன், கல்லிடை சேவா ட்ரஸ்ட் நிர்வாகி திரு. நைனா முகமது ஆகியோருடன் தென்காசி வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் திரு பரமசிவன் ஆகியோர் செம்பியன் மாரத்தான் போட்டிகளை நடத்துவதற்கு பங்களித்த அத்துனை நன்கொடையாளர்களுக்கும் /தன்னார்வலர்களுக்கும் நினைவுபரிசு வழங்கி கௌரவித்தனர். போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும்… கோப்பைகள், சான்றுகள், மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியாக புளுரே நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. ஆனந்த் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.