மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிக்கான ஆணைகள், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் ஆகியவற்றை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கலந்துகொண்டு, தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டு, தூய்மை பணியாளர்களுக்கான சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு உணவருந்தினார்கள்.