தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற 7 மாத பெண் குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும்போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை காண்பித்து குறிப்பிட்ட பெயரை சொல்லும் போது அந்த குழந்தை சரியாக கார்ட்டை எடுத்து சாதனை படைத்ததால் 4 மாத குழந்தையின் சாதனைக்கு அமெரிக்கா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட், வோர்ல்ட் வைட் புக் ஆஃப் ரிக்கார்டில் இரண்டு விருதுகள், இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்ட் விருது உள்ளிட்ட ஐந்து உலக சாதனை விருதுகள் கிடைத்த நிலையில், அந்தக் குழந்தையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமியின் நுண்ணறிவு திறனை மென்மேலும் வளர்க்கும் வகையில் சிறுமிக்கு உறுதுணையாக இருக்க சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.