தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை கமிஷனர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் ராஜாராம் நெல்லை மாநகராட்சிக்கும், ஈரோடு துணை கமிஷனர் சரவணகுமார் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேலூர், கோவை, திருப்பூர், ஆவடி, தாம்பரம் துணை கமிஷனர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.