தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக திரு ஸ்ரீகாந்த் இந்திய ஆட்சி பணி அவர்களைத் தொடர்பு பணி ஏற்றுக் கொண்டவர் முனைவர் திரு பாலகணேஷ் அவர்கள். பொறுப்பேற்ற நாள் முதல் இந்த நாள் வரை அனைத்து நேரங்களிலும் தனது கடமைகளை சரிவர செய்து முடிக்க உண்டான ஆயத்த பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள தவறாதவர்.
தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை என்று தன்னால் இயன்றவரை அனைத்து இடங்களுக்கும் சென்று அந்தந்த வட்டாரத்தை நடைபெறும் பல்வேறு வட்டார வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆனால் இப்படி தஞ்சை மாவட்டத்தை சுற்றி பல இடங்களுக்கு ஆய்வுக்கு சென்றாலும் ஊழல் மிக்க பகுதியாக அடையாளம் காட்டப்படும் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டையில் உட்பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் இருப்பது ஏன் என்பது நமக்கு இன்னும் சரியாக புலப்படவில்லை. இந்த அதிகாரிகளை இப்படித்தான் என்று எளிதாக கடந்து செல்லும் சாமானிய வெகுஜனம் போல சமூகத் தன்னார்வலர்களால் கடந்து செல்ல முடியவில்லை.
இது தொடர்பாக அவர்கள் நம்மிடம் எழுப்பிய கேள்வியின்போது தஞ்சைக்கு மிக அருகில் இருந்தால் மட்டும்தான் அடிக்கடி ஆய்வு செய்வார்களா? கடைக்கோடியில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டதும், தனது செயல்பாடு மீது இதுவரை எந்தவித குறைபாடும் யாரும் கூற முடியாது நிலை நோக்கி பணியாற்றி வரும் திரு பாலகணேஷ் அவர்கள் பேராவூரணி ஊராட்சியை கவனத்தில் கொண்டு இருப்பாரா என்று நமக்கே சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏனென்றால் 100 நாள் வேலை பணி திட்டத்தில் ஊழல், இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக ஊழல் ஊராட்சி பணிகளில் பணியாளருக்கு சம்பளம் தருவதில் பிரச்சனை என்று தொடர்ந்து ஊராட்சி தொடர்பான பல புகார்கள் வெளிவந்துள்ளன.
மேலும் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைக்காடு கிராமத்தில் சாலை வசதி, குடிநீர், மயானம் என்று பல அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க பெறாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக நாமே ஒரு முறை அவரை நேரில் சந்தித்திருக்கிறோம் இருக்கணும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்படுவதோடு பல நேரங்களில் அந்த வேலைகள் கடிதங்களாகவே இருக்கின்றன.
தஞ்சைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளான பாபநாசம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் நேரடி திடீர் ஆய்வில் ஈடுபடும் திரு பாலகணேஷ் அவர்கள் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பேராவூரணி போன்ற கடைகோடிக்கு உட்பட்ட கிராமங்களிலும் வட்டார வளர்ச்சி திட்டங்களை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது ஊழல்வாதிகள் பயப்படுவார்கள் என்பது பல பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக நம்மால் அறியப்படுகிறது.
பாரபட்சம் பார்க்காமல் வேலை செய்பவராக இருந்தாலும் ஒருவேளை பாரபட்சமாக இருக்குமோ என்று பொதுமக்களிடம் எழுந்திருக்கும் எண்ணத்திற்கு திரு பாலகணேஷ் அவர்கள் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குறிப்பாக மயானம் போன்ற முக்கியமாக பெறப்பட்ட மனுக்கள் மீது காலம்தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் அதற்கான திட்டத்தை வகுத்து செயல்முறைப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. கடைக்கோடியை கண்டு கொள்வாரா பாலகணேஷ் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா குவிந்து கிடக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விரைவில் பதில் கிடைக்கும் என்று நம்புவோம்.