சென்னை ரைபிள் கிளப் (CHRC) 1952 ஆம் ஆண்டு சென்னை நகரில் விளையாட்டுத்திறன். ஒழுக்கம். தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு உணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காக சில உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. ரைபிள் கிளப் அதன் பொன்விழாவை 2003 ஆம் ஆண்டு கொண்டாடியது. கிளப்பின் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 ஆகும். புரவலர் உறுப்பினர்கள். வாழ்நாள் உறுப்பினர்கள், ஆண்டு உறுப்பினர்கள் மற்றும் இளைய உறுப்பினர்கள் (பெண் உறுப்பினர்கள் உட்பட) என நான்கு வகை உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை ரைபிள் கிளப் 2 துப்பாக்கி சுடும் வரம்புகளைக் கொண்டுள்ளது. ஒன்று எழும்பூரில் ரைபிள் மற்றும் பிஸ்டல் நிகழ்வுகளுக்காகவும் மற்றொன்று நிகழ்வுகளுக்காகவும் உள்ளது. இந்த கிளப் தனது சாதனைகளுக்காக மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்ற திருமதி ரூப ஸ்ரீநாத் உன்னிகிருஷ்ணன் மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு.பிரித்விராஜ் தொண்டைமான் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கியுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இந்த சென்னை ரைபிள் கிளப்பின் தலலவர் ஆவார் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) அவர்கள் துணைத்தலைவர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர். இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்களால் ரைபிள் கிளப் நிர்வகிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (AGM) (07.12.2024) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை ரைபிள் கிளப்பின் தலைவரும். சென்னை பெருநகர காவல் ஆணையாளருமான திரு.A.அருண், இ.கா.ப. அவர்கள் தலைமையில் ரைபிள் கிளப்பின் துணைத் தலைவர், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில் குமார் சி சரட்கர். இ.காய, செயலாளர் திரு.கே.ராஜசேகர், இணைச் செயலாளர் திரு.பாலாஜி தயாளன். பொருளாளர் திரு.சிபிராஜேஷ், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்னை ரைபிள் கிளப்பின் தலைவர் திரு.A.அருண், இ.கா.ப அவர்கள் கூட்டத்தில் உரையாற்றி. கிளப் உறுப்பினர்கள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்கு தனது ஆதரவு இருக்கும் என்று உறுப்பினர்களுக்கு உறுதியளித்தும். கிளப்பின் வளர்ச்சிக்கு உறுப்பினர்களின் யோசனைகளையும் கேட்டறிந்தார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான கிளப்பின் செயல்பாடுகள் செயலாளரால் முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 500-லிருந்து 1000 உறுப்பினர்களை கொண்டதாக உயர்த்துவது என்று ஆலோசிக்கப்பட்டது.
இக்கிளப்பில் உறுப்பினராக உள்ள செல்வி.S.எழிலரசி அவர்கள் 2024ம் ஆண்டு மே மாதம் புது டில்லியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக் கிடையேயான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஏற்கனவே தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற பிரித்விராஜ் தொண்டைமான் தற்போது உலகளவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பாக தேர்வாகி கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கும், சென்னை ரைபிள் கிளப்பிற்கும் பெருமை சேர்த்தமைக்காக ரைபிள் கிளப் தலைவரும், சென்னை பெருநகர காவல் ஆணையாளருமான திருA.அருண், இ.கா.ப அவர்கள் அவரை வெகுவாக பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
2023-2024-ஆம் ஆண்டிற்கான சென்னை ரைபிள் கிளப் பெண் உறுப்பினர்களுக்கிடையே நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற மீரா ஜெகதீஷ், கங்கா பிரியா வேணுகோபால் மற்றும் ஆண்கள் பிரிவில் பதக்கம் வென்றவர்களையும். ரைபிள் கிளப் தலைவரும், சென்னை பெருநகர காவல் ஆணையாளருமான திரு.A.அருண். இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.