தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் அனைத்து இதர பிரிவுகளிலும் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. பிரேம் ஆனந்த் சின்கா இ.கா.ப அவர்கள் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து கோப்புகளையும் சரிவர முறையாக பராமரித்து வந்த காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இயற்கையை பாதுகாக்கும் விதமாக மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் உடனிருந்தார்.