

கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.
கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தைகைய நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, கோடைகாலத்தில் பணி நேரத்தில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு 1,500 சன் கிளாஸ்களை (முகக்கண்ணாடிகளை) சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் வழங்கப்படுகிறது.
ஸ்பெக்ஸ்மேக்கர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த சன்கிளாஸின் நன்மை என்னவென்றால், இக்கண்ணாடியானது நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் இயற்கையில் குறைந்த எடைகொண்டது. தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் (UV கதிர்கள்) இருந்து கண்களைப் பாதுகாக்கிறது மற்றும் தெளிவான புலக் காட்சி திறனைக் கொண்டுள்ளதாகவும், பணி நேரத்தில் அணிய வசதியாகவும் உள்ளது.
சூரிய ஒளியில் தொடர்ந்து பணிபுரிவதால் போக்குவரத்து காவலர்களுக்கு கண் பிரச்சினைகள், வெயில் பக்கவாதம், தலைச்சுற்றல் போன்ற பல்வேறு மருத்துவ பிரச்சினைகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றைச் சமாளிக்க, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால், இந்த சன்கிளாஸ் (முகக்கண்ணாடிகளை) வழங்கும் முயற்சியை கொண்டு வந்துள்ளது. இதன் விலை ஒன்று ரூ.1,990/- ஆகும், இது மொத்தம் ரூ.29,85,000/- ஆகும்.
காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு சன்கிளாஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திரு. ஆர். சுதாகர் இ.கா.ப., திரு. பண்டி கங்காதர், இ.கா.ப, போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு). காவல் துணை ஆணையாளர் போக்குவரத்து வடக்கு திரு. விஸ்வேஷ் பா. சாஸ்திரி. இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் போக்குவரத்து கிழக்கு திரு. வி. பாஸ்கரன், இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையாளர் போக்குவரத்து தெற்கு திரு.பி.குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
