பட்டுக்கோட்டை தாசில்தார் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்கு கள் முடித்தல்) 10 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி அலுவலராக பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் கலந்து கொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.
இந்த ஜமாபந்தியில் பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 627 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 43 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி ஜமா பந்தி நிறைவு நாளில் 43 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப் பட்டது. மீதமுள்ள 584 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. ஜமாபந்தி யில் பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ், கோட்ட கலால் அலுவலர் தெய்வானை, நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் அருணகிரி, தலைமையிடத்து துணை தாசில்தார் சேக்உ மர்ஷா, மண்டல துணை தாசில்தார்கள் சுரேஷ். கண்ணகி, துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார் மற்றும் சரக வருவாய் ஆய்வாளர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
