தஞ்சாவுர். சொக்கலால் துறையின் மண்டலத்தில் உள்ள, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய் வாளர் அலுவலகத்தில் ‘ஆய்’வாளராக இருப்பவர் சரவணன். பெண்கள் விஷயத் தில் படுவீக்கானவர். அவர்களை பார்த்ததும், பல்லை இளித்துக் கொண்டு, உதவ முன் வருவதுபோல், முன்வரும் இவரால், அப்பகுதி மக்கள் பலரும் முகம் சுழித்து வருவதாக கதைத்துக் கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாது, அனைவரிடத்திலும் ஒருமையில் பேசியும், வாடா, போடா என அழைப்பதும், பப்ளிக்காக லஞ்சம் வாங்கும் இவரால், RTO பணிகள் அனைத்திற்கும் கூடுதலான லஞ்ச தொகை களை வசூல் செய்வதுமாய் உள்ளார்.

இவரது லஞ்சத்திற்கு அடிபணியாதவர்களை கவனத்தில் வைத்து, பொதுச்சாலை யில் நின்று செக்கிங் (ஆய்வு) செய்கிற போது, அந்த வாகனங்களை சிறைப் பிடித்து அபராதம் விதித்து, மிரள வைத்து, அதன் பின், இவரது கைத்தடியான புரோக்கர் வெங்கடேசன் மூலம் பேரம் பேசி, இவருக்கான லஞ்சத்தை கறப்பது போன்ற அதிகார துஷ்பிரயோகங்களை செய்து வருகிறார் சரவணன். அதே நேரத்தில் ‘தான் இப்படி அடாவடியாக செய்யும் லஞ்ச வசூல்கள் எல்லாம் எனக்கல்ல… எல்லாமே மேலிடத்திற்கு என கூறி, நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்திற்கு மேல் கல்லா கட்டி வருகிறார் ‘ஆய்’ வாளர் சரவணன். இவை அனைத்தும் தஞ்சாவூர் விஜிலென்ஸ் போலீசார் கவனத்திற்கு சென்றும், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன பகுதி அலுவலகத்திற்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் கூட இல்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
இவரது வருமானத்துக்கு மீறி சொத்து குவித்து வைத்திருக்கும் சரவணனின் சொத்திற்கான ஆண்டு அறிக்கை கூட, இவரால் எப்போதுமே அரசுக்கு அளிக்கப்படுவதில்லை என்றும், தனக்கு விஜிலென்ஸில் செல்வாக்கு உண்டு என அவராலே கதைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான், இதுவரை இவரது பட்டுக்கோட்டை RTO அலுவலகத்தில் ரெய்டு நடக்கவில்லையோ என அப்பகுதி மக்களால் பேசப்படும் நிகழ்வுகள் கூட. தற்போது வரை, தஞ்சாவூர் விஜிலென்ஸ் போலீசாருக்கு ஒரு கரும் புள்ளியைத்தான் ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் முன்னாள் அமைச்சரான (அதிமுக) விஜயபாஸ்கருக்கு சொந்தமாக வாகனம், இவரது ஆய்வில் சிக்கியதும், அதில் இவரால் பேசப்பட்ட பேரங்கள் எதுவும் படியாததால், விஜயபாஸ்கருக்கு என்ன ரெண்டு கொம்பா என ‘லந்து’ அடித்து விட்டு, அவரது வாகனத் திற்கும் அபராத தொகைக்கான அறிக்கையினை அளித்து, அவரது கெத்து -ஐ காட்டியுள்ளார் சரவணன். அதேபோல், ‘ஆய்’வாளர் சரவணன், பெண்கள் விஷயத்தில் படுவீக் என கூறப்படுவதால், அவருக்கான ‘காமம் உச்சத்தில் இருப்பதை காட்டிக்கொள்ள… பெண்களை பார்த்ததும் அவரது ‘வழுக்கை’ தலையை… அவரே தடவி தடவி.. மசாஜ் செய்வதுபோல் செய்து கொள்வது… சரவணின் ஸ்டைல் என பட்டுக்கோட்டை பகுதி மக்களால் பேசிக் கொள்ளப்படுகிறது.
இவரது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்தும், இவர் வாங்கி குவிக்கும் லஞ்சம் குறித்தும், விஜிலென்ஸ் போலீசாரால், ஆய்வு செய்து, இவர் கைது செய்து சிறையில் டைத்து சரவணனின் மூட்டுவலிப் பசியை தீர்க்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள், அதற்கான ஒரே ‘க்ளு’ ஆய்வாளர் சரவணனுக்கு ‘ஆள் இன் ஆளாக இருப்பவர் வெங்கடேசன் என்பவர்தான். விஜிலென்ஸ் போலீசார், வெங்கடேசனுக்கு ‘லாடம்’ கட்டினால், உரிய ஆதாரங் களுடன், விஜிலென் ஸுக்கு தேவையான அனைத்தும் கிட்டும். எனவே, விஜிலென்ஸின் ‘பிசிறு’ தட்டாத நட வடிக்கைக்கு பரிந்துரைப்பாரா அப்பகுதி மக்களின் ஹீரோ வான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என அனை வரும் எதிர்பார்க்கின்றனர். சொல்வதை சொல்லிப்புட்டோம்… எனவே, புரோக்கர் வெங்கடேசனை தூக்குங்கோ.. தூக்குங்கோ… சிக்குவார் MVI சரவணன்.
