தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாத்திகொல்லைக்காடு துணை மின் நிலையம் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வரும் திரு.ராகவன் அவர்கள் சாமானிய மக்கள் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய எளிய மனிதராக பெயர் பெற்று வருகிறார்.
இவரைப் பற்றி பொதுமக்கள் கூறும் போது பொதுவாக மின்சார அலுவலகத்திற்கு நாம் மின்சாரம் சம்பந்தப்பட்ட எந்த வேலைக்கு சென்றிருந்தாலும் அதிகாரிகள் எளிதில் அனுக முடியாதவர்களாக இருப்பார்கள் என்றும் ஆனால் இரவு பகல் என்று யோசிக்காமல் இவரை எப்போது தொடர்பு கொண்டாலும் அணுக முடிகிறது என்றும் பாராட்டுகளை பெறுகிறார்.
மேலும் வசதி இல்லாத ஒரு குழந்தைக்கு தன்னுடைய உயர் அதிகாரிகள் துணையுடன் கல்விக்காக உதவி செய்து வருவதோடு தன் துறை ரீதியாகவும் தன்னால் முடிந்த உதவிகளை நேர்மையுடன் செய்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று எடுத்துகாட்டாக விளங்கும் இவருக்கு நாமும் மென்மேலும் மனித நேயத்துடன் செயல்படவும் பணி சிறக்கவும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
