சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் வசித்து வந்த ஹேமலதா, பெ/வ-21, என்பவர் தனியார் நிறுவத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19.05.2020 அன்று மாலை, வேலை முடித்து, கிண்டி, நவரத்னா கார்டன், ராஜராஜன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், மேற்படி ஹேமலதா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து ஹேமலதா, 19.05.2020 அன்று J-3 கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

J-3 கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி சீனு, வ/23, திருவல்லிக்கேணி, சென்னை என்பவரை கடந்த 09.06.2020 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், J-3 கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய சுமார் 5 வருடங்கள் தலைமறைவாக இருந்த எதிரி சூரியபிரகாஷ், வ/27, திருவல்லிகேணி, சென்னை என்பவரை (30.07.2025) கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி சூரியபிரகாஷ் மீது ஏற்கனவே D-3 ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி சூரியபிரகாஷ், விசாரணைக்குப் பின்னர் (30.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
