பல நாள் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பிரிவுகளைப் பெறுவதற்கும், தனிமனை அனுமதி பெறுவதற்கும் அனுமதியற்ற மனைகளை அங்கீகரித்து அனுமதி வழங்க இந்த அரசாணை வகை செய்யும்.
இந்த அரசாணையில் கூறியிருப்பது என்னவென்றால், 20.10.2016-க்கு முன்னர் அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் கீழ் ஒரு மனையாவது விற்பனை செய்யப்பட்டிருந்தால், தாராளமாக இந்த அரசாணையின் மூலம் இணையதளத்தின் வாயிலாக அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூபாய் 500 ஆகப் பெறப்படுகிறது.
20.10.2016-க்கு முன்னர் அந்த அனுமதியற்ற மனைப் பிரிவில் யாரேனும் ஒருவரிடம் வாங்கி, அதில் தற்போது வீடு கட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்குரிய தனிமனை அங்கீகாரத்திற்கும் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்தச் செயல்பாடுகளுக்குரிய கால அவகாசம் 30.6.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 15.5.2025-ஆம் தேதியில் அரசாணை எண் 70, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குப் பெரும் பயனளிக்கூடிய இந்த உபயோகமான அரசாணையை வெளியிடுவதற்குரிய முக்கியக் காரணம், மரியாதைக்குரிய இயக்குநர் நகர்ப்புற அமைப்பு இயக்கம் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகுவான பொதுமக்களின் கோரிக்கையாகவும், அதிகப்படியான நிலுவையில் உள்ளதாகவும் கருதப்பட்ட தனிமனை அனுமதி அல்லது அங்கீகாரம் பெறுவதற்கு தற்போது கால நீட்டிப்பு செய்திருப்பதால், நிலுவையில் உள்ள அனைத்து தனிமனை அனுமதி அங்கீகாரமும் தகுதி அடிப்படையில் அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் துறைச் செயலர் வீட்டு வசதித் துறை அவர்களாலும், மாண்புமிகு அமைச்சர் வீட்டு வசதித் துறை அவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட கூட்டு முயற்சியில் அரசாணை எண் 70 பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விற்பனை செய்யாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்திக் கொள்ளவும், விற்பனை செய்யப்பட்டு வரைமுறைப்படுத்தப்படாத தனிமனை அனுமதி போன்றவற்றை வரைமுறைப்படுத்திக் கொள்ளவும் இந்தக் கால அவகாசம் மிகவும் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
