புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட எதிரியை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரியை கைது செய்து அவரிடமிருந்து 57 ½ சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளியை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்…
