அயோத்தி அரசன் அரிச்சந்திரன் வாய்மையால்
ஆக்கிய வரலாற்றை செதுக்கிய காவியம்
சந்திரமதி மனைவி லோகிதாசன் பாலகன்
சந்தோஷமாய் வாழ்ந்த பெருமைக்குரிய அரசன்
தேவலோக இந்திரன் விசுவமித்திரரை அனுப்பி
உண்மையை உயிராக வாழ்ந்தவரை சோதிக்க
பூலோகம் வந்தவரோ யாகத்திற்கு பொருள்கேட்க
சம்மதித்தவருக்கு வனவிலங்குகளால் நாட்டை அழிக்க
காரணமான விலங்குகளை காட்டினில் அழிக்க
காட்டுபன்றி முனிவரிடம் காயம்பட்டதை முறையிட
கோபம்பட்டுகேட்ட முனிவரிடம் நாட்டை அர்ப்பணிக்க
கேட்டபொருளையும் நாட்டுக்கப்பால் தருவதாக வெளியேற
காசியிலே அந்தணனிடம் மனைவிமகனை அடிமையாக்க
அனுப்பிய சுக்கிரனிடம் பொருளை ஒப்படைக்க
கூடவந்தவனுக்கு கூலியாக வீரபாகுவிடம் தன்னைவிற்க
மயானத்தை காத்தான் பொய்சொல்லா புனிதன்
பெற்றமகனை காட்டிலே பாம்புதீண்டி இறக்க
புதைக்க கூலிதராததால் மனைவியை தடுக்க
உண்மையை சோதித்த விசுவாமித்திரர் ஒத்துகிட
மீண்டும் மனைவிமகனோடு அயோத்தியை அரசாள

சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல்துணைக்கண்காணிப்பாளர் (ஓய்வு)
