திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு Master Health Checkup செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று 24.01.2021-ந் தேதி காலை 09.00 மணிமுதல் மாலை 03.00 மணிவரை 5 இடங்களில் நடத்தப்பட்டது. திருச்சிமாநகரகாவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி மருத்துவ முகாம் நடைப்பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டு பரிசோதனைக்கு வந்திருந்த, காவல் அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு உடல்நலம் பேணுவது குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் காவேரி மருத்துவமனை சார்பாக சேவா சங்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், பொன்மலைகாவல் சரகத்தில் சுந்தரம் மருத்துவமனை சார்பாக ஏர்போர்ட்டில் உள்ள விஜய் மஹாலிலும், கோட்டை காவல் சரகத்தில் ராணா மருத்துவமனை சார்பாக சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீரங்கம் காவல் சரகத்தில் GVN மருத்துவமனை சார்பாக திருவானைக்காவலில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் திருமணமண்டபத்திலும் மற்றும் ஆயுதப்படைமற்றும் போக்குவரத்து பிரிவு காவல் ஆளினர்களுக்கு அப்பலோ மருத்துவமனை சார்பாக கே.கே.நகர் ஆயுதப்படைகாவலர் சமுதாய கூடத்திலும் நடைபெற்றது.
இச்சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கு பெற்ற காவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வயது மற்றும் உடல்நிலைக்கேற்ப சிறப்பு பரிசோதனைகளான இ.சி.ஜி, இரத்த பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் அதிநவீனகருவிகள் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
அதில் சிறப்புமருத்துவர்கள் மூலம் உடல் பருமன் குறித்த ஆலோசனைகளும், வயது முதிர்வு காலத்தில் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டகாவல் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த சிறப்பு மருத்துவமுகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகதெரிவித்தனர். இம்மருத்துவ முகாம்களை இணைந்து நடத்திய அனைத்து மருத்துவமனை நிர்வாகத்தினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்கள்.