புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் 02.02.2021 ஆம் தேதி அன்று கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர் திருமதி. சித்ராதேவியை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. பி.வி.ஜெயராம் இ.கா.ப., அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர்.Z. ஆனி விஜயா இ.கா.ப., அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கீதா அவர்கள், பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.செங்கமலகண்ணன் அவர்கள், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.