கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு
சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று இரவு திருடு போயிருந்தது தொடர்பாக முத்து கணேஷ், K – 10 கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. K – 10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.R.கோபாலகுரு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.K.பூபதிராஜ் திரு.S.சுப்பிரமணி, அண்ணா நகர் சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ராஜாசிங், தலைமைக்காவலர் திரு.S.சுரேந்திரன் (த.கா.25983) மற்றும் முதல் நிலைக்காவலர் திரு.S.செந்தில்குமார் (மு.நி.கா.37326) ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தும் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளி யுவராஜ், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 25 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 23.02.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.