சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார்.
இவருக்கு 18.02.2021 அன்று செல்போனில் பேசிய நபர், தான் வங்கியின் மேலாளர் என்றும் தங்களின் கிரெடிட் கார்டுகளின் விபரங்களை கூறினால் போனஸ் பாயிண்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி OTP எண்ணை பெற்று வரபிரசாதின் நான்கு கிரெடிட் கார்டுகளின் வங்கி கணக்கிலிருந்து மொத்தம் பணம் ரூ. 87,631/- ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக யாரோ எடுத்தது தொடர்பாக, வரபிரசாத் திருவல்லிகேணி சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் F – 2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து திருவல்லிகேணி சைபர் கிரைம் காவல் குழுவினர் துரிதமாக செயல்பட்டு இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு, மேற்படி வரபிரசாத்தின் பணத்தை மீட்டு திருப்பி கொடுக்கும்படி, விதிகளுக்குட்பட்டு பரிந்துரை கடிதம் அனுப்பியதன்பேரில் வங்கி நிர்வாகத்தினர், வரபிரசாத்தின் வங்கி கணக்கிற்கு பணம் ரூ .57,081/-ஐ திரும்ப செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த வரபிரசாத் சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு திருவல்லிகேணி காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.