திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய சாலைகளான அவினாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கேயம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்து வருகின்றனர்.
கோடைகாலத்தில் போக்குவரத்து காவலர்கள் வெயிலில் நின்று போக்குவரத்தினை சீர் செய்யும் காவலர்களுக்கு அவர்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மோர் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழ ஜூஸ் வழங்கும் நிகழ்ச்சி 01.03.2021 ல் அவினாசி சாலை புஷ்பா சந்திப்பில் திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப. மாநகர காவல் ஆணையர் அவர்களால் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழ ஜூஸ் வழங்கி துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திரு. சுந்தரவடிவேல், காவல் துணை ஆணையர் (குற்றம் & போக்குவரத்து) திரு. சுரேஷ்குமார், காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) ஆகியோர் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.